PAGE 3

ஆரைக் கீரை
ஆரைக் கீரைச் சாறு எடுத்து , தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ஆரைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
ஆரைக் கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் தேமல் , படை , கரும் படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
ஆரைக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
ஆரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் குணமாகும்.
ஆரைக் கீரை , தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் ஏலக்காயைத் (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
ஆரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் அற்புதமான நினைவாற்றல் பெறலாம்.

_____________________________________________________________________________

பல்வலியை போக்க எளிய இயற்கை வைத்தியங்கள்....
பற்களில் சிலசமயம் எல்லாருக்கும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திவிடும். பற்களில் உண்டாகும் கிருமிகளாலும், பலவீனமான ஈறுகளினாலும் பல்வலி உண்டாகும். இதற்கு எடுத்த எடுப்பிலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டியது இல்லை. அதுதவிர்த்து பற்சிதைவு ஏற்பட்டாலோ, பல்சொத்தையிருந்தாலோ மட்டும் மருத்துவரை நாடுங்கள். கீழ்கண்டமுறைகளிலேதாவது பயன்படுத்திப் பாருங்கள். இயற்கையான வைத்தியம். பாதுகாப்பானதும் கூட.
கோதுமைப்புல் சாறு :-
கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வந்தால், ஓரிரு நாட்களில் அதிலிருந்து புல் முளைக்கும். அதனை எடுத்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.
கொய்யாப்பழ இலை :-
புதிய இரண்டு இளம் இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம். இது சிறந்த கிருமி நாசினி.
இஞ்சி சாறு :-
இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு பல் வீக்கத்தில் ஏற்படும் கெட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.
கிராம்பு :-
இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால்,பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
உப்பு :-
ஒரு கப் வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர,பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.
பூண்டு :-
ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காயம் :-
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.
நல்லெண்ணெய் :-
காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்

_____________________________________________________________________________